பென்சில்வேனியா ஏன் முக்கியமான மாநிலமாகக் கருதப்படுகிறது?
AP
This audio is generated by an AI tool.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
தேர்தலுக்கு முன்னர் குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப்பும் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸும் அங்குள்ள மக்களின் ஆதரவைப் பெற அதிக கவனம் செலுத்தினர்.
பென்சில்வேனியா ஏன் முக்கியமான மாநிலமாகக் கருதப்படுகிறது?
🗳️அங்கு வெற்றிகண்டால் 19 அதிபர் மன்ற வாக்குகளைப் பெறலாம்.
🗳️ தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களுக்கும் ஆதரவு சமநிலையாக கிடைக்கும் 7 'Swing States'இல் அதுவும் ஒன்று.
Swing Statesக்கு மொத்தம் 93 அதிபர் மன்ற வாக்குகள் உண்டு. அவற்றில் ஆக அதிகமான அதிபர் மன்ற வாக்குகளை பென்சில்வேனியாவில் கைப்பற்றலாம்.
மற்ற Swing Statesஇல் எத்தனை அதிபர் மன்ற வாக்குகளை வெல்லலாம்?
அரிஸோனா: 11
ஜார்ஜியா: 16
மிச்சிகன்: 15
நார்த் கரோலைனா: 16
விஸ்கோன்சின்: 10
நெவாடா: 6
🗳️ 2008ஆம் ஆண்டு முதல் பென்சில்வேனியா தேர்ந்தெடுத்த வேட்பாளரே அமெரிக்காவின் அதிபரானார்.
🗳️ 2020இல் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றிபெறுவதற்கு அது முக்கியப் பங்கு வகித்தது.
தற்போதைய அதிபர் மன்ற வாக்குகளின் நிலவரம்...
டிரம்ப்: 266 வாக்குகள்
ஹாரிஸ்: 219 வாக்குகள்
அதிபராவதற்கு வேட்பாளர் 270 அதிபர் மன்ற வாக்குகளை வென்றிருக்கவேண்டும்.