Skip to main content
ஈரானில் கலவரம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஈரானில் கலவரம் - என்ன காரணம்?

வாசிப்புநேரம் -
ஈரானில் கலவரம் - என்ன காரணம்?
AP/Fars News Agency

ஈரான் முழுக்க ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

அங்கு மோசமடையும் பொருளாதார நிலவரம் மக்களைக் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஈரான் தற்போது பல சிக்கல்களை எதிர்நோக்குகிறது. சென்ற ஜூன் மாதம் இஸ்ரேலுடன் நடந்த 12 நாள் போரிலிருந்து இன்னமும் அது மீண்டு வரவில்லை.

ஐக்கிய நாட்டு நிறுவனம் ஈரானின் அணுச்சக்தித் திட்டத்தைக் குறிவைத்து செப்டம்பர் மாதத்தில் மீண்டும் தடைகளை விதித்தது. 

ஈரானின் நாணயம் ஓர் அமெரிக்க டாலருக்கு 1.4 மில்லியன் ரியாலாகச் (rial) சரிந்திருக்கிறது.

இதுவரை 570க்கும் மேலான ஆர்ப்பாட்டங்கள் நடந்திருப்பதாக அமெரிக்க மனித உரிமைக் குழு ஒன்று தெரிவித்திருக்கிறது.

116 பேர் மாண்டதாகவும் அது சொன்னது.

ஏன் ஆர்ப்பாட்டங்கள் மூண்டன?

ஈரானின் நாணய மதிப்பு சரிந்ததால் விலைவாசி உயர்ந்தது. 

ஈரான் ஆண்டு அடிப்படையில் 40 விழுக்காட்டுப் பணவீக்கத்தை எதிர்நோக்குகிறது.

சென்ற மாதம் அரசாங்கம் பெட்ரோல் விலையை அதிகரித்தது.

முன்பு அதற்குத் தேசிய அளவில் உதவித்தொகை வழங்கப்பட்டது.

விலை இன்னமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானில் அரசாங்கத்துக்கு எதிரான கோபம் பல ஆண்டுகளாகக் குமுறிக்கொண்டிருந்தது.

2022ஆம் ஆண்டில் மஹ்சா அமினி (Mahsa Amini) எனும் 22 வயது குர்தியப் பெண் மாண்டார். 

அவரது மரணம் புதிய போராட்டத்தை ஆரம்பித்து வைத்தது. 

இளைய தலைமுறையினர், குறிப்பாகப் பெண்கள் அடிப்படைச் சுதந்திரத்தை நாடுகின்றனர். 

ஆதாரம் : AP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்