Skip to main content
தங்க விலையின் சரிவு தொடருமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தங்க விலையின் சரிவு தொடருமா?

வாசிப்புநேரம் -
தங்கத்தின் விலை தற்போது சற்று சரிந்தாலும் அது மீண்டும் புதிய உயரத்தைத் தொடக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

OCBC வங்கியின் முதலீட்டுப் பிரிவு நிர்வாக இயக்குநர் வாசு மேனன் (Vasu Menon) தங்க விலை உயரும் வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார்.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கத்தின் விலை உயரும் என்றார் அவர்.

டிசம்பர் மாதம் அமெரிக்க மத்திய வங்கி வட்டியைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்க விலை உயர்வதற்கு வேறு சில காரணங்களும் உண்டு.

மத்திய வங்கிகளும் தனிப்பட்ட முதலீட்டாளர்களும் தங்கம் வாங்குகின்றனர்.

அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவை தங்க விலை உயர்வுக்கு வழி வகுக்கலாம் என்றார் திரு மேனன்.

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் (Jerome Powell) அடுத்த ஆண்டு பதவி விலகவிருக்கிறார்.

அதன் பிறகு மத்திய வங்கி தன்னிச்சையாகச் செயல்படுமா என்ற ஐயம் காரணமாகவும் தங்க விலை உயரலாம்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்