Skip to main content
உலகக் கிண்ணக் காற்பந்தாட்டத்தில் ஈரான் கலந்துகொள்ளுமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகக் கிண்ணக் காற்பந்தாட்டத்தில் ஈரான் கலந்துகொள்ளுமா?

வாசிப்புநேரம் -
இவ்வாண்டு நடக்கவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஈரானின் பங்கேற்பு கேள்விக்குறியாகியுள்ளது.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து போட்டியை நடத்தவிருக்கின்றன.

ஆனால் சில நாள்களுக்கு முன்னர் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கின.

அதன் விளைவாக ஈரான் அணி உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்க அமெரிக்காவுக்கு அனுப்பப்படுமா என்பது இன்னமும் தெரியவில்லை.

உலகக் கிண்ணத்தில் ஈரான் கலந்துகொள்வதற்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக அந்நாட்டின் காற்பந்துச் சம்மேளனத் தலைவர் மெஹ்டி தாஜ் (Mehdi Taj) கூறினார்.

போட்டியைப் புறக்கணிப்பதைப் பற்றி அதிகாரிகள் பேசுவதாகவும் உறுதியான முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆசியாவில் நடத்தப்பட்ட உலகக் கிண்ணத் தகுதிச்சுற்றில் ஈரான் அணி முதலிடத்தைப் பிடித்தது.

உலகக் கிண்ணத்தில் பங்கெடுத்தால் முதலில் பெல்ஜியம், எகிப்து, நியூஸிலந்து ஆகிய நாடுகளுடன் போட்டியிடும்.

ஈரான் போட்டியிலிருந்து விலகினால் வேறொரு நாடு ஈரானுக்குப் பதிலாகப் போட்டியிடவேண்டும். ஆனால் அதுகுறித்து அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (FIFA) எதுவும் கூறவில்லை.

சரித்திரத்தில் இதுவரை எந்தவொரு நாடும் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து விலகியதில்லை.

ஈரானுக்குப் பதிலாக ஈராக் அல்லது ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் பங்கெடுக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

இதற்குமுன் நவம்பர் 2006இல் அனைத்துலகக் காற்பந்தாட்டங்களில் கலந்துகொள்ள FIFA ஈரானுக்குத் தடை விதித்திருந்தது.

பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அடுத்த மாதமே அந்தத் தடை அகற்றப்பட்டது.

ஆனால் காற்பந்து விவகாரங்களில் ஈரானிய அரசாங்கத்தின் தலையீட்டை எதிர்க்கும் நாடுகள் ஈரானுக்கு மீண்டும் தடை விதிக்கவேண்டும் என்று கோரியுள்ளன.

பொது விளையாட்டரங்கங்களில் ஆட்டத்தைக் காண ஈரானிய அரசாங்கம் பெண்களுக்குத் தடை விதித்ததால் உலகக் கிண்ணத்திலிருந்து ஈரானை அகற்றும்படி மற்ற நாடுகள் கேட்டுள்ளன.
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்