Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு 2 வாரங்கள் எஞ்சியுள்ள வேளையில் பெய்ச்சிங்கில் கடுமையான பனிப்பொழிவு

வாசிப்புநேரம் -

சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க 2 வாரங்களே எஞ்சியுள்ள வேளையில் அங்குக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 

பெய்ச்சிங்கில் இன்று காலை வெப்பநிலை பெரிய அளவில் குறைந்து பூஜ்யத்துக்குக்கீழ் 9 டிகிரி செல்சியஸாக இருந்தது. 

பனிப்பொழிவு அங்கிருந்த சாலைகள், கட்டடங்கள், ஒலிம்பிக் போட்டிகளுக்கான இடங்கள் போன்றவற்றை மூடிக் காணப்பட்டது. 

பெய்ச்சிங்கில் அடிக்கடி தட்பநிலை பூஜ்யத்துக்குக்கீழ் இறங்குவது வழக்கமாக இருந்தாலும், அந்நகரில் பொதுவாகப் பனிப்பொழிவு ஏற்படுவது அரிது. 

எனினும் அடுத்த மாதம் 4ஆம் தேதி தொடங்கவுள்ள பெய்ச்சிங் போட்டிகளில் பெரும்பாலும் செயற்கைப் பனிப்பொழிவு பயன்படுத்தப்படும். 

போட்டி இடம்பெறும் இடங்களில் ஏற்கனவே பனிப்பொழிவு உருவாக்கும் தானியக்க இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

அதற்கு மறுப்பயனீட்டு எரிசக்தி சிறந்தது என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறினர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்