விலங்குத் தோட்டத்திலிருந்து தப்பிய ஓநாய் - தென்கொரியாவில் பரபரப்பு
படம்: AFP/Daejeon Fire Headquarters
This audio is generated by an AI tool.
தென்கொரிய விலங்குத் தோட்டத்திலிருந்து ஓநாய் ஒன்று தப்பியிருக்கிறது.
நாட்டில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கையாகப் பள்ளி ஒன்று மூடப்பட்டுள்ளது.
தலைநகர் சோலிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் டேஜியொன் (Daejeon) நகரின் விலங்குத் தோட்டத்தில் ஓநாய் இருந்தது.
தேடல் பணி தீவிரமாக நடைபெறுகிறது. 300க்கும் அதிகமான தீயணைப்பாளர்கள், காவல்துறை அதிகாரிகள், ராணுவப் படையினர் ஆகியோர் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஓநாய் எங்கு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆளில்லா வானூர்திக் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.
ஆனால் கனத்த மழையால் கேமராக்களை மீட்டுக்கொண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தோட்டத்தில் குழி தோண்டி வேலியைச் சேதப்படுத்தி ஓநாய் தப்பியதாக அதிகாரி கூறினார்.