Skip to main content
குழந்தைகளை அடித்த சந்தேகம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

குழந்தைகளை அடித்த சந்தேகம் - பெண்ணை அறைந்த தந்தை

வாசிப்புநேரம் -
குழந்தைகளை அடித்த சந்தேகம் - பெண்ணை அறைந்த தந்தை

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 02 Nov 2026 02:12PM புதுப்பிப்பு : 04 Nov 2026 02:25AM

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் கடைத்தொகுதியில் இரு குழந்தைகளை தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணை, குழந்தைகளின் தந்தை அறைந்திருக்கிறார். 

அதில் அந்தப் பெண் நிலைதடுமாறிக் கீழே விழுந்தார்.

சம்பவம் நேற்று (நவம்பர் 1) பிற்பகல் 3 மணியளவில் ஓம்பாக் KLCC (Ombak KLCC) கடைத்தொகுதியில் நடந்தது.

36 வயது ஆடவர் தமது 7 வயது மகனுடனும் 2 வயது மகளுடனும் நடந்துசென்றபோது சம்பவம் நிகழ்ந்ததாகச் சைனா பிரஸ் (China Press) நாளேடு தெரிவித்தது.

அறிமுகமில்லாத பெண் ஒருவர் திடீரெனச் சிறுவனைப் பின்னாலிருந்து தள்ளியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அவர் சிறுமியின் பின்தலையில் அடித்ததாகவும் தந்தை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இணையத்தில் பரவும் காணொளியில் மஞ்சள் நிற ஆடையணிந்த பெண், ஆடவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தெரிகிறது.

பெண் திடீரென ஆடவரை அறைகிறார். பதிலுக்கு ஆடவரும் அவரை அறைகிறார்.

பெண் முகத்தை மூடிக்கொண்டு பின்னால் நகரும்போது நிலைதடுமாறிக் கீழே விழுகிறார்.

"உடனே காவல்துறையை அழையுங்கள்!" என்று ஆடவர் கோபமாகக் கத்துகிறார்.

பின்னர் அவர் அழுதுகொண்டிருந்த மகனிடம் திரும்பிச் செல்கிறார்.

சம்பந்தப்பட்ட பெண் ஏற்கனவே கடைத்தொகுதியில் மற்றவர்களையும் தாக்கியதாக இணையவாசிகள் சிலர் கூறினர்.

அவருக்கு மனநோய் இருப்பதாகவும் சிலர் தெரிவித்தனர். ஆனால் அதைக் காவல்துறை உறுதிப்படுத்தவில்லை.

சம்பவம் குறித்து விசாரிக்கப்படுகிறது. 

ஆதாரம் : 8world

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்