உலகம் trending
ஆயிரம் iPhone-களுக்கு ஈடாகாது இந்த அன்பு!
வாசிப்புநேரம் -
இன்றைய நவீன உலகில் பிறந்தநாள் என்றாலே விலை உயர்ந்த பொருள்களையும் ஆடம்பரப் பரிசுப் பொருள்களையும்தான் நாம் எதிர்பார்க்கிறோம்.
ஆனால் ஒரு 10 வயது சிறுமி தனது அக்காவுக்கு அளித்த பரிசு, இணையவாசிகளை நெகிழச் செய்துள்ளது.
உண்மையான iPhone-ஐவிட அன்பால் பொதியப்பட்ட அந்தக் 'காகித iPhone' சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது.
@financefromscratch_ எனும் Instagram கணக்கில் அந்தக் காணொளி பகிரப்பட்டது.
அதில் அவர் தம் பிறந்தநாள் பரிசை ஆவலுடன் பிரிக்கிறார்.
அசல் iPhone பெட்டி போலவே இருக்கும் அந்தப் பெட்டியைத் திறந்தபோது ஒரு சுவாரஸ்யம் காத்திருந்தது.
அது உண்மையான iPhone அல்ல...
மிக நுணுக்கமாகக காகிதத்தில் செய்யப்பட்ட ஒரு iPhone!
"எனது பிறந்தநாளுக்கு iPhone வேண்டும் என்று 10 வயதே ஆன என் தங்கையிடம் கேட்டேன். அவள் எனக்காக இதை உருவாக்கிப் பரிசளித்தாள்" என்று அவர் கூறினார்.
கேமராக்கள், பொத்தான்கள் என அனைத்தையும் அந்தச் சிறுமி மிக நேர்த்தியாகச் செய்திருந்தாள்.
எளிமையான, தூய்மையான அன்பு இணையவாசிகளின் இதயங்களை வென்றது.
"உண்மையான iPhone-ஐ விட இது மிகவும் மதிப்புமிக்கது!" என்று இணையவாசி ஒருவர் பதிவிட்டார்.
"குழந்தைகளின் மனம் மிகவும் தூய்மையானது" என மற்றொருவர் குறிப்பிட்டார்.

ஆதாரம் : Others