உலகம் trending
KFC வாசலில் பிறந்த குழந்தை!
வாசிப்புநேரம் -
(படம்: AFP/Ben Stansall)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் குழந்தை பிறக்கத் தயாரானால் என்ன செய்வது?
இங்கிலாந்தின் வோர்செஸ்டர்ஷரில் (Worcestershire) ஒரு தம்பதிக்கு அருகிலிருந்த KFC உணவகமே உதவிக்கு வந்தது!
33 வயது கேட்டி மர்ஃபிக்கு (Katie Murphy) ஆகஸ்ட் 29ஆம் தேதி பிரசவ வலி அதிகரித்தது.
துணைவர் ஸ்டீபன் கிர்பியுடன் (Stephen Kirby) மருத்துவமனைக்குக் காரில் சென்றுகொண்டிருந்தார்.
பாதி வழியில் குழந்தை பிறக்கப்போவதை உணர்ந்தார் கேட்டி.
உடனே அவசரச் சேவையை அழைத்த ஸ்டீபன், அருகிலிருந்த KFC வாகன நிறுத்துமிடத்திற்குள் காரைச் செலுத்தினார்.
ஆனால் மருத்துவ உதவி வருவதற்குள் குழந்தை பிறந்துவிட்டது!
இரவு 9.35 மணிக்குப் பிறந்த ஆண் குழந்தையை ஸ்டீபனே கைகளில் ஏந்தினார்.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு மருத்துவ உதவி வந்தது.
குழந்தைக்கு ‘கோடி’ (Cody) என்று பெயரிட்டனர்.
KFC நிறுவனர் கர்னல் ஹார்லண்ட் சாண்டர்ஸை (Colonel Harland Sanders) நினைவுகூரும் வகையில் அவனுக்கு இன்னொரு செல்லப்பெயரும் கிடைத்தது — ‘கர்னல் கோடி!’
முதல் பிறந்தநாளுக்கு கோடியை KFCக்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது குடும்பம்.

ஆதாரம் : Others