Skip to main content
பெட்டிக்குள் வைத்து மறந்து போன முட்டைகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பெட்டிக்குள் வைத்து மறந்து போன முட்டைகள் - என்ன சத்தம் இந்த நேரம்?

வாசிப்புநேரம் -
வீட்டுக்குள் ஒரு விசித்திரமான சத்தம்.

அது என்ன என்று பார்த்த பெண்ணுக்கு வியப்பு கலந்த அதிர்ச்சி.

முதலில் அது பல்லி என்று நினைத்தார்.

ஆனால் முட்டைகளுக்கிடையே சத்தம் போட்டுக் கொண்டிருப்பது கோழிக் குஞ்சு என்பதை அவர் உணர்ந்தார்.

அவர் சில நாளுக்கு முன்பு கம்பத்து முட்டைகளை வாங்கிப் பெட்டிக்குள் வைத்தார். பிறகு அதை அவர் மறந்துவிட்டார்.

அந்தப் பெட்டிக்குள்ளிருந்துதான் சத்தம் வந்தது.

தாம் கண்டதை அவர் காணொளியாக் TikTok-இல் பதிவுசெய்தார்.

முட்டைகளைப் பல நாள் பயன்படுத்தாமல் இருந்ததால் ஓட்டை உடைத்துக் கொண்டு கோழிக்குஞ்சு வெளியே வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இணையவாசிகள் அந்தச் சம்பவம் வேடிக்கையாக இருப்பதாகக் கருத்துத் தெரிவித்தனர்.

ஒரு சிலர் கோழிக் குஞ்சை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது பற்றிப் பல நல்ல நல்ல ஆலோசனைகளை வழங்கினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்