உலகம் trending
"வலது கையில் தொலைபேசி"...ஆனால் வலது கையே இல்லை
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறலுக்காகப் பெண்ணுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அழைப்பாணை விடுக்கப்பட்ட சம்பவத்தின் காணொளி பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து இவ்வாறு நடந்துள்ளதாக CBS News ஊடகம் கூறியது.
பிப்ரவரி மாதத்தில் பெண் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தியவாறு காரை ஓட்டியதாகக் காவல்துறை அதிகாரி சந்தேகித்தார்.
அவர் ஓட்டுநரிடம் காரை நிறுத்தும்படிக் கூறுவது அதிகாரியின் சீருடையில் உள்ள கேமரா பதிவில் தெரிகிறது.
"நீங்கள் உங்கள் வலது கையில் தொலைபேசியைப் பயன்படுத்தியவாறு காரை ஓட்டிச் சென்றீர்கள்," என்று அதிகாரி சொன்னார்.
'இல்லை' என்று சொன்ன ஓட்டுநர் கேத்லின் தாமஸ் வலது கையை உயர்த்துகிறார்.
ஆனால் அவருக்குக் கை இல்லை. முழங்கை மட்டுமே உண்டு.
சொன்னது உண்மை என்று சத்தியம் செய்யும்படி அதிகாரி கூறுகிறார்.
தாமஸும் சத்தியம் செய்தார்.
இருந்தாலும் அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
சம்பவத்தின் காணொளிப் பதிவைப் பெற்ற தாமஸ் பின்னர் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தார்.
அவருக்கு அதிக ஆதரவும் கிடைத்தது.
அவர் நேற்று முன்தினம் (29 மே) அழைப்பாணைக்காக நீதிமன்றம் செல்லவேண்டியிருந்தது.
அதிகாரிகள் அதற்கு முன்னரே அழைப்பாணையை மீட்டுக்கொண்டனர் என்று CBS News சொன்னது.