Skip to main content
காளான் பறிக்கும்போது கரடியால் தாக்கப்பட்ட பெண்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

காளான் பறிக்கும்போது கரடியால் தாக்கப்பட்ட பெண்கள்

வாசிப்புநேரம் -
காளான் பறிக்கும்போது கரடியால் தாக்கப்பட்ட பெண்கள்

படம்: Envato

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 04 Oct 2025 08:58PM புதுப்பிப்பு : 04 Oct 2025 09:32PM
வட ஜப்பானின் மியாகி வட்டாரத்திலுள்ள மலைப்பகுதியில் காளான் பறித்துக்கொண்டிருந்த சிலருக்கு அதிர்ச்சி.

மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென்று கரடி பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

70 வயதைத் தாண்டிய 2 பெண்கள் கரடியின் பிடியில் சிக்கினர்.

ஒருவர் மாண்டார். விலங்கு தாக்கியதற்கான தடயங்கள் அவரின் உடலில் இருந்ததாகக் காவல்துறையினர் NHK ஊடகத்திடம் கூறினர்.

பெண்களில் இன்னொருவரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

இவ்வாண்டு ஏப்ரலுக்கும் ஆகஸ்ட் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் ஜப்பானில் 69 பேர் கரடியால் தாக்கப்பட்டதாக NHK சொன்னது.

அவர்களில் ஐவர் மாண்டனர்.

இந்நிலையில் கரடிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள ஜப்பான் அதன் துப்பாக்கி விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்