Skip to main content
சன்னலிலிருந்து கட்டுக்கட்டாய் ரொக்கத்தை வீசியெறிந்த பெண்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

சன்னலிலிருந்து கட்டுக்கட்டாய் ரொக்கத்தை வீசியெறிந்த பெண்

வாசிப்புநேரம் -
சன்னலிலிருந்து கட்டுக்கட்டாய் ரொக்கத்தை வீசியெறிந்த பெண்

AFP/Mike Clarke

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

1,000 ஹாங்காங் டாலர் (சுமார் 162 வெள்ளி) நோட்டுகள்....

சீனாவின் குவாங்டோங் (Guangdong) வட்டாரத்தில் பெண் ஒருவர் கட்டுக்கட்டாய் நோட்டுகளை வீசியுள்ளார்.

அடுக்குமாடிக் கட்டடத்தில் உள்ள சன்னலிலிருந்து அவர் வீசிய நோட்டுகள் பண மழையாகக் கீழே விழுந்தன.

நடைபாதையில் இருந்த பாதசாரிகள் பலர் அதைப் பொறுக்கிக்கொண்டதாக The Standard ஊடகம் சொன்னது.

மொத்தம் 2 மில்லியன் டாலர் இருக்கும் என்று கருதப்படுகிறது.

கணவருடன் வாக்குவாதத்தில் இருந்தபோது பெண் கோபத்தில் பணத்தை வீசியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதிகாரிகள் நடந்தது என்ன என்பதைக் கண்டறிவதாக The Standard கூறியது.

பண நோட்டுகளைப் பொறுக்கிய பொதுமக்கள் அதிகாரிகளிடம் அவற்றை ஒப்படைக்கும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஆதாரம் : Others/The Standard

மேலும் செய்திகள் கட்டுரைகள்