Skip to main content
ஈரானியப் பெண்கள் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் உரிமம் பெற அனுமதி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஈரானியப் பெண்கள் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் உரிமம் பெற அனுமதி

வாசிப்புநேரம் -
ஈரானியப் பெண்கள் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் உரிமம் பெற அனுமதி
படம்: AFP
வெளியீடு : 05 Feb 2026 08:00AM புதுப்பிப்பு : 05 Feb 2026 08:05AM
ஈரானில் பெண்கள் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் உரிமம் பெறச் சட்டப்படி அனுமதி வழங்கப்படுகிறது.

இதற்கு முன் பெண்கள் மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டர் ஓட்டுவது சட்டவிரோதம் அல்ல.

எனினும் நடைமுறையில் அதிகாரிகள் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க மறுத்தனர்.

அதனால் சாலை விபத்துகளுக்குப் பெண்களே காரணங்காட்டப்பட்டனர்.

பெண்கள் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் மீது பழி விழும் நிலை இருந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை (3 பிப்ரவரி) ஈரானின் முதலாம் துணையதிபர் முகமது ரிலா அரிஃப் (Mohammad Reza Aref ) ஒரு தீர்மானத்தில் கையெழுத்திட்டார்.

அதன்படி பெண்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து, தேர்வுக்குப் பின் அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கவேண்டும்.

அந்த மாற்றம் ஈரானில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் எதிரொலி என்று சொல்லப்படுகிறது.

ஈரானில் பொருளாதாரக் குறைபாடுகளால் ஆர்ப்பாட்டம் வெடித்தது.

கடந்த மாதம் அது அரசாங்கத்திற்கு எதிரான நாடுதழுவிய ஆர்ப்பாட்டமாக மாறியது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்