Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனா, தைவானைத் தனிமைப்படுத்துவதை அனுமதிக்கமாட்டோம்! - அமெரிக்க மக்களவை நாயகர்

வாசிப்புநேரம் -

சீனா, தைவானைத் தனிமைப்படுத்துவதை அமெரிக்கா அனுமதிக்கப்போவதில்லை என்று அமெரிக்க மக்களவை நாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) கூறியுள்ளார். 

தம்முடைய ஆசியப் பயணத்தின் இறுதிக்கட்டமாக அவர் தற்போது ஜப்பான் சென்றுள்ளார். அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திருமதி பெலோசி அவ்வாறு கூறினார். 

"தைவான் மற்ற இடங்களுக்குச் செல்வதை வேண்டுமென்றால் அவர்கள் கட்டுப்படுத்தலாம். ஆனால் நாங்கள் அங்குச் செல்வதைத் தடுப்பதன்வழி, தைவானைத் தனிமைப்படுத்தமுடியாது"

என்று அவர் சொன்னார்.

அவரது பயணத்தின் நோக்கம் வட்டார நிலவரத்தை மாற்றுவது அல்ல. தைவான் நீரிணையில் அமைதியையும் தற்போதைய நிலவரத்தையும் கட்டிக்காப்பதுதான் என்று திருமதி பெலோசி தெரிவித்தார்.

இந்நிலையில் தைவான் நீரிணையில் அமைதியை நிலைநாட்டுவதன் தொடர்பில் அணுக்கமாக ஒத்துழைக்க அமெரிக்காவும் ஜப்பானும் இணக்கம் தெரிவித்துள்ளன.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்