Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"இஸ்ரேலும் ஈரானும் அமைதி காக்கவேண்டும்" - உலகத் தலைவர்கள் வேண்டுகோள்

வாசிப்புநேரம் -
இஸ்ரேலும் ஈரானும் அமைதி காக்கவேண்டும் என்று உலகத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

லெபனான் மீது இஸ்ரேல் தரைத்தாக்குதலைத் தொடங்கியபின் இஸ்ரேல் மீது ஈரான் புவியீர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சியது.

ஈரான் நடத்திய தாக்குதலில் பெரிய சேதம் இல்லையென்றாலும் இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தினால் நொறுங்கும் அளவுக்குக் கடுமையான தாக்குதலை நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கிறது.

ஏற்கனவே ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இப்போது நடந்திருப்பது இரண்டாவது நேரடித் தாக்குதல்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகியவை ஈரானின் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறின.

போரின் விளிம்பில் இருக்கும் இருநாடுகளும் அந்த நிலையிலிருந்து பின்வாங்க வேண்டும் என்று உலக நாடுகள் கேட்டுக்கொண்டன.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்