உலகம் trending
ஓராண்டுச் சேமிப்பில் பரிசு கொடுத்த மகன் - கண்கலங்கிய தந்தை
வாசிப்புநேரம் -
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்: TikTok/@nep2une12
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தந்தை நெடுங்காலமாக ஆசைப்பட்ட ஜெர்சியை (Jersey) வாங்கிக் கொடுத்த மகன் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்திருக்கிறார்.
மகனுக்கு வயது 12.
தந்தையின் அபிமான மெக்சிகோ அணி ஜெர்சியைத் தந்தையர் தினப் பரிசாக வாங்கிக் கொடுத்தான்.
அதன் விலை 100 டாலர் (சுமார் 130 வெள்ளி).
பரிசைத் தரும் முன்பு கண்களை மூடிக்கொள்ளும்படி மகன் தந்தையிடம் சொன்னான்.
இமை திறந்தபோது அவரால் கண்களை நம்ப முடியவில்லை.
உண்மையான ஜெர்சிதானா என்று பல முறை வினவினார்.
ஜெர்சி வாங்குவதற்குப் பணம் ஏது என்று அவர் கேட்டபோது ஓராண்டாகப் பணம் சேமித்ததாகச் சிறுவன் கூறினான்.
தந்தைக்குக் கண்ணீர் ததும்பியது; வார்த்தை வரவில்லை.
அவர் உலகின் சிறந்த தந்தை என்று சிறுவன் கூறியதும் தந்தை அவனை ஆரத் தழுவினார்.
மகனின் அலாதி அன்பைக் காட்டும் காணொளியைத் தந்தை இணையத்தில் வெளியிட்டார்.
காணொளியை மில்லியன் கணக்கானோர் கண்டு நெகிழ்ந்தனர்.
விலை உயர்ந்த ஜெர்சியைவிட மகனின் எண்ணமே மதிப்புக்குரியது என்று இணையவாசிகள் குறிப்பிட்டனர்.

ஆதாரம் : Others