அல்ஜீரியா அணியை "வருக வருக" என வரவேற்ற அமெரிக்க நகர்
X/Karim
This audio is generated by an AI tool.
அமெரிக்காவின் கான்சஸ் (Kansas) மாநிலத்தில் லாரன்ஸ் (Lawrence) நகரில் அல்ஜீரியக் காற்பந்து அணி பயிற்சி செய்கிறது.
அந்தச் செய்தியை அறிந்த உள்ளூர்வாசிகள் பூரித்துப் போயினர்....வருக வருக என அல்ஜீரிய அணியை வரவேற்றனர்.
அணி தங்கும் ஹோட்டலுக்கு லாரன்ஸ்வாசிகள் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கான்சஸ் பல்கலைக்கழகத்தில் பயிற்சிக்குச் சென்றபோது வீரர்களைச் சந்திக்க லாரன்ஸ்வாசிகள் திரண்டனர். வீரர்களுடன் படங்கள் எடுத்தனர்.
பல்கலைக்கழகத்தின் இசைக் குழு விளையாட்டாளர்களை வரவேற்க அல்ஜீரியாவின் தேசிய கீதத்தை வாசித்தது.
அல்ஜீரிய அணியின் ரியாத் மாரெஸ் (Riyad Mahrez) X தளத்தில் தமது நன்றியைத் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் மற்ற காணொளிகளும் பரவுகின்றன.
தங்கள் நகரைப் பயிற்சித் தளமாகத் தேர்ந்தெடுத்ததற்கு முதியவர் ஒருவர் நன்றி தெரிவிக்கும் காணொளி இணையவாசிகளின் மனங்களைக் கொள்ளையடித்திருக்கிறது.
பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றுசேர உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி ஒரு நல்ல வாய்ப்பு என்று பலர் பதிவிட்டனர்.