Skip to main content
உலகக் கிண்ணம் 2026: குழுச்சுற்றில் சாதனை படைத்த அமெரிக்கா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகக் கிண்ணம் 2026: குழுச்சுற்றில் சாதனை படைத்த அமெரிக்கா

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணம் 2026: குழுச்சுற்றில் சாதனை படைத்த அமெரிக்கா

படம்: Valerie MACON / AFP

வெளியீடு : 13 Jun 2026 11:39AM புதுப்பிப்பு : 13 Jun 2026 12:34PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்கா அதன் முதல் ஆட்டத்தில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது.

இன்று காலை ஒன்பது மணிக்குத் தொடங்கிய ஆட்டத்தில் அது தென்னமெரிக்க நாடான பராகுவேயுடன் மோதியது.

4 - 1 என்ற கோல்கணக்கில் அமெரிக்கா வெற்றிபெற்றது.

உலகக் கிண்ணப் போட்டியில் அமெரிக்க அணி 4 கோல்கள் அடித்தது இதுவே முதன்முறை.

உலகத் தரவரிசையில் 17ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்கா இதுவரை உலகக் கிண்ணப் போட்டியில் காலிறுதியைக் கடந்ததில்லை.

இந்த முறை அமெரிக்கா கனவோடு காத்திருக்கிறது.

அர்ஜெண்டினா பயிற்றுவிப்பாளர் மரிஸியோ பச்சடீனோ (Mauricio Pochettino), பெரிய வெற்றியைத் தேடித் தருவார் என்று அமெரிக்க ரசிகர்கள் நம்புகின்றனர்.

இன்று அதிகாலை மூன்று மணிக்கு நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் கனடாவும் போஸ்னியாவும் ஒன்றுக்கு ஒன்று என்று சமநிலை கண்டன.

சிங்கப்பூர் நேரப்படி அடுத்த ஆட்டம் நாளை (ஜூன் 14) அதிகாலை 3 மணிக்கு நடக்கும். கத்தாரும் சுவிட்சர்லந்தும் அந்த ஆட்டத்தில் பொருதும்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பே வட்டார விளையாட்டரங்கில் போட்டி (San Francisco Bay Stadium) நடைபெறும்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்