அரையிறுதியில் அர்ஜென்ட்டினா
REUTERS/Agustin Marcarian
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் இடம் பிடித்துள்ளது அர்ஜென்ட்டினா.
சுவிட்சர்லந்துடன் பொருதிய காலிறுதி ஆட்டத்தில் அது 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் வென்றது.
ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்து முன்னுக்குச் சென்றது அர்ஜென்டினா.
எலெக்சிஸ் மேக் ஏலிஸ்டர் (Alexis Mac Allister) கோல் போட்டபோது அரங்கமே அதிர்ந்தது.
ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் சுவிட்சர்லந்தின் டான் என்டோயே (Dan Ndoye) ஒரு கோல் போட்டார்.
சமநிலையில் முடிந்த ஆட்டத்தில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
அர்ஜென்ட்டினா அடுத்தடுத்து 2 கோல்களைப் புகுத்தி வெற்றியை உறுதிசெய்தது.
அரையிறுதிச் சுற்றில் இனி அர்ஜென்ட்டினாவும் இங்கிலாந்தும் மோதவிருக்கின்றன.