Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகக் கிண்ணம்: 24 ஆண்டுக்குப் பின் திரும்பிய துருக்கியேவுக்கு ஏமாற்றம்

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணம்: 24 ஆண்டுக்குப் பின் திரும்பிய துருக்கியேவுக்கு ஏமாற்றம்

REUTERS/Albert Gea

வெளியீடு : 14 Jun 2026 04:15PM புதுப்பிப்பு : 16 Jun 2026 06:51PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் துருக்கியேவுக்கு இன்று (14 ஜூன்) ஏமாற்றம்.

D பிரிவு ஆட்டத்தில் துருக்கியேவும் ஆஸ்திரேலியாவும் மோதின.

2க்கு 0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி கண்டது.

24 ஆண்டுக்குப் பின் போட்டிகளுக்குத் தகுதிபெற்ற துருக்கியேவின் தொடக்கம் ஆட்டங்கண்டது.

"மிகவும் கவலையாக இருக்கிறது. ஆனால் அடுத்து வரும் ஆட்டங்களில் மீண்டு வர நேரம் இருக்கிறது," என்றார் பயிற்றுவிப்பாளர் வின்சென்சோ மோன்டேலா (Vincenzo Montella).

ஆட்டத்தில் வெற்றிபெற்ற  ஆஸ்திரேலியா இப்போது D பிரிவின் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

பராகுவேக்கு எதிராக 4க்கு 1 என்ற கோல்கணக்கில் வென்ற அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும்  வெள்ளிக்கிழமை (19 ஜூன்) சந்திக்கவிருக்கின்றன.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்