Skip to main content
பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் தவிக்கும் பிரேசில்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் தவிக்கும் பிரேசில் - முதல் ஆட்டத்தில் சமநிலை

வாசிப்புநேரம் -
பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் தவிக்கும் பிரேசில் - முதல் ஆட்டத்தில் சமநிலை

Apu GOMES / AFP

வெளியீடு : 14 Jun 2026 09:47AM புதுப்பிப்பு : 14 Jun 2026 03:01PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில்  பிரேசிலும் மொரோக்கோவும் பொருதிய ஆட்டம் ஒன்றுக்கு ஒன்று என்று சமநிலை கண்டது.

ஆக அதிகமாக ஐந்து முறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ள பிரேசில் பற்றி இந்தமுறை அதிகம் பேச்சில்லை. 

முதல் ஆட்டத்தில் சமநிலை ஏற்பட்டதால் பிரேசில் ரசிகர்களுக்குச் சோர்வு.

Related article image
Apu GOMES / AFP

அரங்குகளில் கூட்டம் இல்லை என்ற குறைகூறலுக்கு நடுவே நியூயார்க் அரங்கில் 80,000க்கும் அதிகமாக ரசிகர்கள் முன்னிலையில் பிரேசில் ஆட்டம் நடந்தது.

1934முதல் இதுவரை முதல் ஆட்டத்தில் பிரேசில் தோற்றதில்லை என்ற சாதனை மட்டும் தொடர்கிறது.

பிரேசில் அணி கிட்டத்தட்ட தோல்வியைத் தழுவும் அபாயத்தில் இருந்தது.

வினிசியுஸ் ஜூனியர் (Vinicius Junior) பிரேசிலுக்கு ஒரு கோலைப் புகுத்தி ஆட்டத்தைச் சமநிலையில் முடித்தார்.

முதல்முறையாக வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளர், இத்தாலியின் கார்லோ அன்சலோட்டி (Carlo Ancelotti) தலைமையில் களம் இறங்கும் பிரேசில் பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் தவிக்கிறது.  

"உலகக் கிண்ணத்தை முதல் ஆட்டத்தை வைத்து வெல்ல முடியாது,"என்றார் அன்சலோட்டி.

காலை 9 மணிக்கு  ஹெய்ட்டிக்கும் ஸ்காட்லந்துக்கும் இடையிலான ஆட்டம் தொடங்கியது. 

நண்பகல் 12 மணிக்கு ஆஸ்திரேலியா, துருக்கியே மற்றொரு ஆட்டத்தில் சந்திக்கின்றன. 

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்