15 முறை கோலைத் தடுத்து கியூரசாவ் சாதனை
REUTERS/Kai Pfaffenbach
This audio is generated by an AI tool.
எக்குவடோரும் (Ecuador) கியூரசாவும் (Curacao) சந்தித்த உலகக் கிண்ணக் காற்பந்தாட்டம் கோலின்றிச் சமநிலையில் முடிந்தது.
அதன்மூலம் கியூரசாவ் அதன் முதல் உலகக் கிண்ணப் புள்ளியைப் பெற்றது.
கியூரசாவ் கோல்காவலர் இலோய் ரூம் (Eloy Room) தமது அணிக்கு அந்தப் புள்ளியைப் பெற்றுத்தந்தார்.
15 தடவை எதிரணி கோல் போட முடியாமல் அவர் தடுத்தார்.
உலகக் கிண்ணப் போட்டிக்கு முதல்முறை தகுதிபெற்றிருக்கும் கியூரசாவுக்குப் பெருமையையும் தேடித்தந்தார்.
உலகக் கிண்ணப் போட்டியில் இதற்குமுன் ஒரு கோல்காவலர் ஆக அதிகமாக 16 தடவை எதிரணி கோலைத் தடுத்திருக்கிறார்.
அந்தச் சாதனை அமெரிக்கா அணியின் டிம் ஹோவர்ட்டைச் (Tim Howard) சேரும்.
2014ஆம் ஆண்டு நடந்த அந்த ஆட்டத்தின் நேரம் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் சாதனை படைத்தார்.
இதுவரை உலகக் கிண்ணத்தின் இரண்டு ஆட்டங்களில் விளையாடிய எக்குவடோர் 1 உலகக் கிண்ணப் புள்ளியைப் பெற்றுள்ளது.
அதன் அடுத்த ஆட்டம் ஜெர்மனியுடன்.
கியூரசாவின் அடுத்த ஆட்டம் ஐவரி கோஸ்ட்டுடன்.
இரண்டு ஆட்டங்களும் 26ஆம் தேதி நடைபெறும்.
கியூரசாவ் 156,000 மக்கள் தொகையை மட்டுமே கொண்டுள்ளது.
உலகக் கிண்ணத்திற்குத் தகுதிபெற்ற ஆகச்சிறிய நாடாகவும் அது திகழ்கிறது.