Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகக் கிண்ணம் 2026: அரங்கத்தில் காலி இருக்கைகள்... அனுமதிச் சீட்டு விலை காரணம்?

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணம் 2026: அரங்கத்தில் காலி இருக்கைகள்... அனுமதிச் சீட்டு விலை காரணம்?

படம்: REUTERS/Paul Childs

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளைக் காண்பதற்கான அனுமதிச் சீட்டுகளின் விலை குறித்த கவலை மீண்டும் எழுந்துள்ளது.

மெக்சிகோவின் குவாடலஹாராவில் (Guadalajara) தென் கொரியாவுக்கும் செக் குடியரசுக்கும் இடையே போட்டி நடந்தது.

44,985 பேர் வருகை தந்திருந்ததாக அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (FIFA) தெரிவித்தது.

46,000 பேர் அமரக்கூடிய அரங்கத்தில் பல காலி இருக்கைகள் காணப்பட்டதாகத் தெரியவந்தது.

சீட்டின் அதிக விலையே அதற்குக் காரணம் என்று குறைகூறினர் பல காற்பந்து ரசிகர்கள்.

விலை நிர்ணய முறையையும் விமர்சித்தனர்.

ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் அது குறித்து அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தைத் தொடர்பு கொண்டுள்ளது.

சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino) அனுமதிச் சீட்டின் விலையைத் தற்காத்துப் பேசியிருந்தார்.

மற்ற பெரிய விளையாட்டு நிகழ்வுகளுக்கு இணையாகவே விலைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் அதிகப்படியான விலை ரசிகர்களைப் பங்கேற்கவிடாமல் செய்யலாம் என்று Football Supporters Europe போன்ற அமைப்புகள் எச்சரித்துள்ளன.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்