Skip to main content
இங்கிலாந்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இங்கிலாந்து-அர்ஜென்ட்டினா பகை - வரலாறு தெரியுமா?

வாசிப்புநேரம் -
இங்கிலாந்து-அர்ஜென்ட்டினா பகை - வரலாறு தெரியுமா?

படம்: REUTERS/Amanda Perobelli

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இங்கிலாந்து-அர்ஜென்ட்டினா அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்ற அர்ஜென்ட்டினா அணி வீரர்கள் "ஃபாக்லந்துத் (Falkland) தீவுகள் எங்களுக்குச் சொந்தம்" என்ற பதாகையை ஏந்தி பவனி வந்தனர்.

FIFA விதிமுறைகள்படி அரசியல் ரீதியான பதாகைகள், சின்னங்கள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றைப் போட்டிகளுக்குக் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

விதிமுறைகளை மீறி அர்ஜென்ட்டினா அணி அவ்வாறு செய்தது குறித்து FIFA இன்னும் கருத்துரைக்கவில்லை.

ஃபாக்லந்துத் தீவுகள் போர்

1982ஆம் ஆண்டில் பிரிட்டனும் அர்ஜென்ட்டினாவும் தீவுகளைக் கைப்பற்றப் போரில் ஈடுபட்டன.

பிரிட்டனின் அந்தத் தீவுகள் "ஃபாக்லந்து" என்று அழைக்கப்படுகின்றன.

அர்ஜென்ட்டினா அவற்றை "மால்வினாஸ்" (Malvinas) என்று அழைக்கிறது.

1816இல் அர்ஜென்ட்டினா ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு ஸ்பெயின் வசமிருந்த இடங்கள் அனைத்தும் தனக்குத் தான் சொந்தம் என்று அர்ஜென்ட்டினா வாதாடியது.

1833இல் பிரிட்டன் சட்டவிரோதமாகத் தீவுகளைக் கைப்பற்றியதாகவும் அர்ஜென்ட்டினா கூறியது.

அந்த வரலாற்றைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.

1765இல் பிரிட்டன் அதன் முதல் கடற்படைத் தளத்தைத் தீவுகளின் மேற்குப் பகுதியில் நிறுவியது.

கிழக்குப் பகுதியில் பிரான்ஸும் காலனியை நிறுவியிருந்தது. அந்தக் காலனியை பிரான்ஸ் பிறகு ஸ்பெயினுக்கு விற்றது.

தீவுகள் பிறகு யார் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்ற சர்ச்சையால் பிரிட்டனுக்கும் ஸ்பெயினுக்கும் இடையே சண்டை மூண்டது.

1811இல் ஸ்பானியர்கள் தீவுகளை விட்டுக் கிளம்பிய பிறகு சண்டை நின்றது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற அர்ஜென்ட்டினா அன்றிலிருந்து தீவுகளைக் கைப்பற்ற முனைந்தது.

1982இல் நடந்த போரில் 649 அர்ஜென்ட்டின ராணுவ வீரர்களும் 255 பிரிட்டிஷ் வீரர்களும் மாண்டனர். இறுதியில் பிரிட்டன் வெற்றிபெற்றது.

ஆனால் தீவுகள் குறித்து அர்ஜென்ட்டினா மக்களிடையே விரக்தி தொடர்கிறது.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்