Skip to main content
காலணிகள் களவுபோயின... இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

காலணிகள் களவுபோயின... இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை

வாசிப்புநேரம் -
காலணிகள் களவுபோயின... இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை

படம்: Reuters

வெளியீடு : 13 Jun 2026 01:06PM புதுப்பிப்பு : 13 Jun 2026 02:38PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இங்கிலாந்து காற்பந்து அணியின் காலணிகள் திருடப்பட்டுள்ளன.

முதல் பயிற்சிக்கு முன்னர் அது நடந்தது.

காற்பந்துகள், மற்ற பயிற்சிப் பொருள்கள் ஆகியவையும் திருடப்பட்டதாக The Guardian ஊடகம் தெரிவித்தது.

அமெரிக்க மாநிலம் மிஸோரியின் (Missouri) கான்சஸ் சிட்டியில் இங்கிலாந்து அணி அதன் பயிற்சி முகாமை அமைத்திருக்கிறது.

திருட்டு தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கான்சஸ் சிட்டி காவல்துறை அறிவித்திருக்கிறது.

இங்கிலாந்து அணி காவல்துறையுடன் ஒத்துழைத்துப் பயிற்சிப் பொருள்களைத் திருப்பிப் பெற வேண்டும்.

சிங்கப்பூர் நேரப்படி வரும் வியாழக்கிழமை (ஜூன் 18) அதிகாலை 4 மணிக்கு இங்கிலாந்து அதன் முதல் ஆட்டத்தில் இறங்கவிருக்கிறது.

1966ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கிண்ணத்தில் வெற்றிபெற முனைகிறது இங்கிலாந்து.

ஆனால் இந்தச் சம்பவம் இங்கிலாந்து அணிக்குப் புதிய சிக்கலை உருவாக்கியிருக்கிறது.

சில நாள்களுக்கு முன்னர் அதன் பயிற்சி முகாமுக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. 9 பேர் காயமடைந்தனர். அணி உறுப்பினர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.
ஆதாரம் : Others/The Guardian

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்