மீண்டும் இங்கிலாந்து... கிண்ணத்தைக் கைப்பற்றுமா?
Images via Reuters/Ed Sykes
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இங்கிலாந்து கூடுதல் நேரத்தில் போட்ட கோலுடன் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அது நார்வேக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஆட்டத்தின் முதல் கோலைப் போட்டார் நார்வேயின் அஹ்ண்ட்ரேயாஸ் ஷல்டரப் (Andreas Schjelderup).
முதல் பாதி முடிவுக்குள் அதைச் சமநிலைப்படுத்தினார் இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹம் (Jude Bellingham).
அதே 1- 1 என்ற நிலையில் ஆட்டம் முடிந்தது.
15 நிமிடங்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.
கூடுதல் நேரத்தில் மீண்டும் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார் பெல்லிங்ஹம்.
நார்வேயின் முக்கிய பலம் எர்லிங் ஹாலண்ட்.
இங்கிலாந்துக்கு ஹேரி கேன்.
இருவரும் ஒரு கோல் கூட போடாமலேயே ஆட்டம் முடிந்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து 2018க்குப் பிறகு முதல்முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அது அர்ஜென்ட்டினா (Argentina) அல்லது சுவிட்சர்லந்தைச் சந்திக்கும்.
1966இல் இங்கிலாந்து உலகக் கிண்ணத்தை வென்றது. இப்போது மீண்டும் ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது.