இங்கிலாந்தின் 60 ஆண்டு கனவைக் கலைத்தது அர்ஜென்ட்டினா
வாசிப்புநேரம் -
படம்: AP/Rebecca Blackwell
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ணக் காற்பந்து அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்ட்டினா 2-1 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதியாட்டத்துக்கு முன்னேறியிருக்கிறது.
தொடக்கத்திலிருந்தே விறுவிறுப்பு.
முற்பாதியில் இரு அணிகளுமே கோல் போடவில்லை.
55ஆம் நிமிடத்தில் பந்தை வலைக்குள் புகுத்தினார் இங்கிலாந்தின் ஆன்ட்டனி கோர்டன் (Anthony Gordon).
விட்டுக்கொடுக்காமல் ஆடியது அர்ஜென்ட்டினா.
85ஆம் நிமிடத்தில் ஆட்டத்தைச் சமப்படுத்தினார் அர்ஜென்ட்டினாவின் என்ஸோ ஃபெர்னாண்டெஸ் (Enzo Fernandez).
92ஆம் நிமிடத்தில் மற்றொரு கோல். இம்முறை லவ்ட்டாரோ மார்ட்டினெஸ் (Lautaro Martinez)
வென்றது அர்ஜென்ட்டினா.
1966க்குப் பிறகு இறுதியாட்டத்துக்கு முன்னேறும் இங்கிலாந்தின் கனவு கலைந்தது.
அடுத்து ஸ்பெயினுடன் களமிறங்கவுள்ளது அர்ஜென்ட்டினா.
அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் பிரான்சை
2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஆதாரம் : Mediacorp Seithi