பல பெருமைகள் பேசும் ஒரே அரங்கம்
படம்: Carl DE SOUZA / AFP
This audio is generated by an AI tool.
எஸ்டேடியோ அஸ்டெகா (Estadio Azteca)
உலகின் ஆகப் பிரபலமான விளையாட்டு அரங்கங்களில் ஒன்று.
மெக்சிகோவில் உள்ளது.
100,000க்கும் அதிகமானோர் அமரலாம்.
இந்த முறை உலகக் கிண்ண தொடக்க ஆட்டம் இந்த அரங்கில் தான்...
இதன்வழி 3 உலகக் கிண்ண தொடக்க ஆட்டங்களை நடத்திய பெருமை இந்த அரங்கைச் சேரவிருக்கிறது.
முதல் தொடக்க ஆட்டம் 1970இல்
இரண்டாவது தொடக்க ஆட்டம் 1986இல்
இதன் பெருமை இதோடு நின்றுவிடவில்லை.
சகாப்தங்களின் சாதனைகள்....
காற்பந்து உலகின் இரு பெரும் ஜாம்பவான்களின் சாதனைச் சுவடுகளைப் பதிவுசெய்த அரங்கமாகவும் இது விளங்குகிறது.
ஒருவர் பெலே (Pele).
1970ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை பிரேசிலின்
பெலே இந்த அரங்கில்தான் வென்றார்.
இறுதியாட்டத்தில் பிரேசில் 4-1 என இத்தாலியை வென்றது.
இது பிரேசிலுக்குக் கிடைத்த 3ஆவது உலகக் கிண்ணம்.
அடுத்ததாக மறைந்த காற்பந்து சகாப்தம் மரடோனா (Diego Maradona).
1986 உலகக் கிண்ண காலிறுதி ஆட்டத்தில் மரடோனா புகுத்திய கோல்கள் வரலாறாக மாறியது இந்த அரங்கில்தான்.
நான்கே நிமிடங்களில் அவர் இரண்டு கோல்கள் புகுத்தி அசத்தினார்.
51ஆவது நிமிடத்தில் 'The Hand of God' கோல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் உயரத்தில் வந்த பந்தை தன் தலையால் எட்ட முடியாது என்று தெரிந்ததும், மரடோனா மிக சாதுரியமாக இடது கையைப் பயன்படுத்தி பந்தை வலைக்குள் புகுத்தினார்.
ஆட்ட நடுவர் அதை கவனிக்கத் தவறியதால், அது கோல் என அறிவிக்கப்பட்டது.
இது கொஞ்சம் தலையாலும், கொஞ்சம் கடவுளின் கையாலும் அடிக்கப்பட்ட கோல் என்று மரடோனா வருணித்தார்.
அந்தச் சம்பவம் நடந்தது அஸ்டெகா அரங்கில்தான்.
55ஆவது நிமிடத்தில் 'The Goal of The Century' கோல்
அந்த சர்ச்சை ஓய்வதற்குள் மரடோனா மற்றோர் அதிரடி கோலைப் போட்டார்.
திடலின் பாதி தூரத்தை முழு வேகத்தில் ஓடி 5 இங்கிலாந்து ஆட்டக்காரர்களைக் கடந்து மரடோனா கோல் போட்டார்.
அதனை "நூற்றாண்டின் சிறந்த கோல்" என்று FIFA அறிவித்தது.
அது நடந்ததும் அஸ்டெகா அரங்கில்!
இத்தனை பெருமைகளைக் கண்ட எஸ்டேடியோ அஸ்டெகா அரங்கம் மீண்டும் வரலாறு படைக்கத் தயாராகிவிட்டது.