உலகக் கிண்ணக் காற்பந்து: மின்னல் வேகக் கோலை முறியடிக்க ஆளில்லை
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: Murad Sezer/AP)
கண் இமைக்கும் நொடியில் ஒரு கோல்...
2002இல் தென்கொரியாவுக்கு எதிரான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அது சாத்தியமானது.
கோலுக்குச் சொந்தக்காரர் துருக்கியே வீரர் ஹக்கான் சுக்குர் (Hakan Sukur).
ஆட்டம் தொடங்கிய 11வது விநாடியில் அவர் அந்தக் கோலைப் புகுத்தி சாதனை படைத்தார்.
அந்தச் சாதனை இதுவரை நீடிக்கிறது; யாரும் முறியடிக்கவில்லை.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் 13 பேர் அதிவேகக் கோல்கள் போட்டுள்ளனர்.
⚽ அவர்களில் இரண்டாவது அதிவேகக் கோலுக்கு உரியவர் வாக்லாவ் மாசெக் (Vaclav Masek).
அவர் செக்கோஸ்லோவாக்கியா (Czechoslovakia) வீரர்.
1962இல் மெக்சிக்கோவுக்கு (Mexico) எதிரான ஆட்டத்தில் 15ஆவது விநாடியில் கோலடித்தார்.
⚽ 3ஆவது இடத்தில் - எர்னஸ்ட் லெஹ்னர் (Ernest Lehner)
இந்த ஜெர்மானிய வீரர் 1934இல் ஆஸ்திரியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 25ஆவது விநாடியில் கோல் போட்டார்.
⚽ 4ஆவது இடத்தில் - பிரையன் ராப்சன் (Bryan Robson)
அவர் 1982இல் 28 விநாடிகளில் கோல் அடித்தார்.
⚽ 5ஆவது இடத்தில் - கிளின்ட் டெம்ப்சே (Clint Dempsey) உள்ளார்.
அவர் 2014இல் 30 விநாடிகளில் கோல் போட்டார்.

ஆதாரம் : Others