Skip to main content
உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் நடந்த கைகலப்பு: FIFA விசாரணை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் நடந்த கைகலப்பு: FIFA விசாரணை

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் நடந்த கைகலப்பு: FIFA விசாரணை

படம்: Reuters/ Dylan Martinez

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் காற்பந்துச் சம்மேளனமான FIFA உலகக் கிண்ணப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குப்பின் நடந்த கைகலப்பை விசாரணை செய்யவிருக்கிறது.

அதற்காக ஒழுங்கு, நன்னெறிக் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்பெயினும் அர்ஜென்ட்டினாவும் சந்தித்த ஆட்டத்தில் 1-0 என ஸ்பெயின் வெற்றிகண்டது.

போட்டி முடிந்தபோது அர்ஜென்ட்டினாவின் லியாண்ட்ரோ பரேடெஸ் (Leandro Paredes) ஸ்பெயின் அணியின் சில விளையாட்டாளர்களுடன் மோதினார்.

ஸ்பெயினின் எரிக் கார்சியா (Eric Garcia), காவி (Gavi) ஆகியோருடன் அவர் சண்டையிட்டார்.

அர்ஜென்ட்டினாவின் பயிற்றுவிப்பாளர் லயனல் ஸ்கலோனி (Lionel Scaloni) சண்டையை நிறுத்த முயற்சி செய்தார்.

மோதல் விசாரணை எவ்வளவு நாள் நடைபெறும் என்ற விவரத்தை FIFA வெளியிடவில்லை.

 
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்