Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமெரிக்காவைத் திரும்பிப் பார்க்க வைக்கும் ஜெர்மனியின் பிரெடி!

வாசிப்புநேரம் -
அமெரிக்காவைத் திரும்பிப் பார்க்க வைக்கும் ஜெர்மனியின் பிரெடி!

படம்: REUTERS/Arafat Barbakh

வெளியீடு : 13 Jun 2026 06:30PM புதுப்பிப்பு : 16 Jun 2026 06:54PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

FIFA உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளனர்.

ஆனால் அவர்களில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்கர்களின் மனத்தை மட்டுமில்லாமல் வெள்ளை மாளிகையின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சாலைவழி இரு நண்பர்களுடன் பயணம் செய்த அவர் தாம் பார்த்து ரசித்த காட்சிகளைப் பகிர்ந்து வருகிறார்.

"X" சமூக வலைத்தளத்தில் பிரெடி (Freddy) என்ற பெயரில் அவர் பகிரும் பதிவுகள் இணையவாசிகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

88,000 பேர் அமரக்கூடிய அலபாமா (Alabama) மாநிலத்தின் ஓபன் (Auburn) பல்கலைக்கழக விளையாட்டரங்கத்தில் அவர் எடுத்த காணொளிகளை மில்லியன் கணக்கானோர் கண்டுள்ளனர்.

அரங்கைச் சுற்றிப் பறந்த பருந்து, அரங்கத்தில் இடம்பெற்ற வாணவேடிக்கைக் காட்சி போன்றவை அவற்றில் அடங்கும்.

வெளிப்புற நடவடிக்கைப் பொருள்கள் விற்கும் கடை ஒன்றில் துப்பாக்கி சுடும் பயிற்சித்தளம் இருந்ததையும் வியப்புடன் பகிர்ந்தார்.

அதை வெள்ளை மாளிகையும் பகிர்ந்து "அமெரிக்காவுக்கு வருக" என்று குறிப்பிட்டதாய் AFP செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஆனால் எந்தப் பதிவிலும் முகத்தைக் காட்டாத பிரெடி உண்மையானவர்தானா அல்லது செயற்கை நுண்ணறிவால் உருவான அடையாளமா என்ற கேள்வியும் இணையவாசிகள் இடையே எழாமல் இல்லை.

அதற்கு அண்மையில் அவரைச் சந்தித்த பிரபல கூடைப்பந்துக் குழுவான நியூ ஆர்லின்ஸ் பெலிக்கன்ஸ் (New Orleans Pelicans) "பிரெடி நிஜமானவர் தான்," என்று "X" தளத்தில் உறுதிசெய்தது.

பிரெடியின் இந்த அமெரிக்கப் பயணம் நெஞ்சைத் தொடும் கொண்டாட்டமாக மாறியுள்ளது!
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்