உலகம் trending
உணவகத்தில் கைகலப்பு - உலகக் கிண்ணத்தில் சலசலப்பு
வாசிப்புநேரம் -
படம்: threads/@arifhut_
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மலேசியாவில் உலகக் கிண்ண ஆட்டம் ஒன்றைக் காணத் திரண்ட ரசிகர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள பண்டார் சன்வே (Bandar Sunway) பகுதியில் ஓர் உணவகத்தில் நடந்தது.
அர்ஜென்ட்டினாவும் எகிப்தும் மோதிய knockout ஆட்டத்தின்போது உணவகத்தில் சிலரிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் காவல்துறை கூறியது.
அதனால் கைகலப்பும் வாக்குவாதமும் நிகழ்ந்தது என்று சொல்லப்பட்டது.
சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட காணொளிகள் சமூக ஊடகத்தில் பரவி வருகின்றன.
அவற்றில் பலரும் நாற்காலிகளைத் தூக்கி எறிவதையும் கூச்சலிடுவதையும் பார்க்கமுடிகிறது.
சண்டையில் மூவருக்குக் காயம் ஏற்பட்டதாய்க் காவல்துறை சொன்னது.
விசாரணை நடைபெறுகிறது.
சண்டையில் ஈடுபட்டவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சி தொடர்கிறது என்றும் அதிகாரிகள் கூறினர்.

ஆதாரம் : Others