3 நாடுகள், 3 வண்ணங்கள், 1 பந்து
வாசிப்புநேரம் -
படம்: Guillermo Arias / AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
TRIONDA...
அதுவே இந்த ஆண்டின் FIFA உலகக் கிண்ணப் போட்டிக்கான அதிகாரபூர்வ பந்தின் பெயர்.
"மூன்று அலைகள்" என்பதே அதற்கான பொருள் என்று சொல்கிறது அதை வடிவமைத்த Adidas நிறுவனம்.
23ஆவது முறையாக நடக்கும் உலகக் கிண்ணப் போட்டியை முதல் முறையாகக் கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
அதைக் குறிக்கும் வகையில் வெள்ளை நிறத்திலான அப்பந்தில் சிவப்பு, நீலம், பச்சை என்று 3 நிறங்கள் இடம்பெற்றுள்ளன.
சிவப்பு நிறப் பகுதிகள்:
🔴 கனடாவைப் பிரதிபலிக்கிறது.
🔴 அதன் தேசியக் கொடியில் இருக்கும் மேப்பல் இலை வடிவங்கள் இடம்பெற்றுள்ளன.
பச்சை நிறப் பகுதிகள்:
🟢 மெக்சிகோவைக் குறிக்கிறது.
🟢 அதன் தேசியக் கொடியில் உள்ள கழுகைச் சித்திரிக்கும் விதமாகக் கழுகின் முகம் அவற்றை அலங்கரிக்கின்றது.
நீலம் நிறப் பகுதிகள்:
🔵 அமெரிக்காவை அடையாளப்படுத்துகிறது.
🔵 அதில் அச்சிடப்பட்டுள்ள நட்சத்திரச் சின்னங்கள் அமெரிக்கத் தேசியக் கொடியின் நட்சத்திரங்களை நினைவூட்டுகின்றன.
வெறும் 4 வெளிப்புறப் பகுதிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் பந்தும் இதுவே. வெயிலிலும் மழையிலும் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் அது தயாரிக்கப்பட்டுள்ளதாய்ச் சொல்கிறது Adidas.
தோற்றத்தைத் தாண்டி பந்தின் வடிவமைப்பில் தொழில்நுட்பத்துக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆட்டத்தின்போது நடுவர் பந்தின் நகர்வுகளைத் துள்ளியமாகக் கணிக்க உதவ அதில் சிறப்பு உணர்கருவிச் சில்லு பொருத்தப்பட்டுள்ளது மேலும் ஒரு கூதல் சிறப்பு.

ஆதாரம் : Others