Skip to main content
உலகக் கிண்ணத்தில் ஆக அதிக கோல்களை அடித்து எம்பாப்பே சாதனை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகக் கிண்ணத்தில் ஆக அதிக கோல்களை அடித்து எம்பாப்பே சாதனை

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணத்தில் ஆக அதிக கோல்களை அடித்து எம்பாப்பே சாதனை

படம்: AFP/Chandan Khanna

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கிண்ணத்தில் இன்றைய நிலையில் ஆக அதிக கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார் பிரான்ஸ் அணித் தலைவர் கிலியான் எம்பாப்பே (Kylian Mbappe).

22 கோல்களைப் புகுத்தி அர்ஜென்ட்டினாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸியின் (Lionel Messi) 21 கோல் சாதனையை முறியடித்துள்ளார் எம்பாப்பே.

இன்று அதிகாலை உலகக் கிண்ணத்தின் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்தும் பிரான்ஸும் சீறிப்பாய்ந்தன.

6-4 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை இங்கிலாந்து வென்றது.

எம்பாப்பே தமது அணிக்கு இரண்டு கோல்கள் போட்டார்.

இந்த உலகக் கிண்ணத்தில் மொத்தம் 10 கோல்கள் போட்டிருக்கிறார்.

2018 போட்டியில் 4 கோல்கள், 2022 போட்டியில் 8 கோல்கள் போட்டிருந்தார்.

இதுவரை உலகக் கிண்ணத்தில் 22 முறை விளையாடியுள்ளார் எம்பாப்பே.

உலகக் கிண்ணத்தில் ஆக அதிக கோல்களைப் புகுத்தியவருக்கான Golden Boot பட்டம் அவருக்குக் கிடைக்கலாம். ஆனால் அதற்கு நாளை காலை நடக்கவிருக்கும் இறுதிப் போட்டிவரை காத்திருக்கவேண்டும்.

அர்ஜெண்டினாவும் ஸ்பெயினும் மோதுகின்றன. அதில் லயனல் மெஸ்ஸி கோல் புகுத்தினால் எம்பாப்பேயின் சாதனை சமமாகும் அல்லது முறியடிக்கப்படும்.

"மெஸ்ஸி நாளை நிச்சயமாக கோல் அடிப்பார்...அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. நான் எனது குழு வெற்றிபெற உதவினேன், அவ்வளவுதான்," என்றார் எம்பாப்பே.
 
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்