Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

காஸாவில் உலகக் கிண்ண ஆட்டங்களைத் திரையிட்டவர் கொல்லப்பட்டார்

வாசிப்புநேரம் -
காஸாவில் உலகக் கிண்ண ஆட்டங்களைத் திரையிட்டவர் கொல்லப்பட்டார்

படம்: Egyptian Committee in Gaza

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காஸா மக்களுக்காக உலகக் கிண்ண ஆட்டங்களைத் திரையிட்டவர் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

57 வயது முகமது அல் வஹிடி (Mohamed al-Wahidi) எகிப்தைப் பிரதிநிதித்து பல ஆண்டுகளாகக் காஸாவில் நிவாரண நடவடிக்கைகளை வழிநடத்தி வந்தார்.

அதைப் போலவே பொது இடங்களில் உலகக் கிண்ண ஆட்டங்களை அனைவரும் கண்டு களிக்க அவர் முயற்சி எடுத்தார்.

எகிப்து - அர்ஜென்ட்டினா ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னர் அவர் கொல்லப்பட்டார்.

காஸாவின் சாப்ரா (Sabra) வட்டாரத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது அவர் ஆட்டத்தைக் காண டாக்சியில் அங்கிருந்து டெல் அல்-ஹவா (Tel al-Hawa) பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தார்.

அவரைக் குறிவைக்கவில்லை என்றும், ஹமாஸ் அமைப்பின் ராணுவத் தளத்தைக் குறிவைத்துதான் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் இஸ்ரேல் கூறியது.

அவருடன் மேலும் மூவர் கொல்லப்பட்டனர். அவருடைய டாக்சி ஓட்டுநர் உயிர் பிழைத்தார்.
ஆதாரம் : Others/The Guardian

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்