எம்பாப்பேயை இழிவுபடுத்திய செனட்டர்.....மன்னிப்புக்கேட்டது பராகுவே
வாசிப்புநேரம் -
Reuters/James Lang
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிரெஞ்சு காற்பந்து அணித் தலைவர் கிலியான் எம்பாப்பே (Kylian Mbappe) பராகுவே செனட்டர் கூறிய இனவாதக் கருத்துகளைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.
பிரான்ஸிடம் பராகுவே தோற்ற பிறகு பராகுவே செனட்டர் செலெஸ்ட் அமாரியா (Celeste Amarilla) எம்பாப்பேயைப் பற்றி ஏளனமாகப் பதிவிட்டிருந்தார்.
அவருடைய இனம் குறித்து வெறுப்பான கருத்துகளை X தளத்தில் பதிவிட்டார்.
மேலும் பராகுவேயின் விளையாட்டாளர்கள் திரு எம்பாப்பேயை அடித்திருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதற்கு எம்பாப்பே பதிலளித்தார்.
செனட்டர் அமாரியா தமது பொறுப்புக்குத் தகுதியற்றவர் என்றும், இவ்வாறு பேசி பராகுவேயை அவமானப்படுத்தியிருக்கிறார் என்றும் அவர் சொன்னார்.
இன வெறுப்பால் பராகுவே அணியின் சாதனைகளை அனைவரும் மறந்துவிடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
பிரான்ஸின் காற்பந்துச் சம்மேளனமும் செனட்டர் அமாரியாவின் கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.
சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்பதாகச் சம்மேளனம் தெரிவித்தது.
பராகுவே அரசாங்கம் செனட்டரின் கருத்துகளுக்கு மன்னிப்புக் கேட்டது. பராகுவே அதிபர் பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மக்ரோனுக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பியுள்ளார்.
திரு மக்ரோன் எம்பாப்பேவுக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தார்.
இனவாதத்துக்கு ஒருபோதும் இடம் கிடையாது என்று திரு மக்ரோன் உறுதிபடக் கூறினார்.

ஆதாரம் : Mediacorp Seithi