உலகக் கிண்ணத்தில் 21 கோல்கள் - மெஸ்ஸியின் கின்னஸ் சாதனை
IMAGN IMAGES via Reuters/Nathan Ray Seebeck
This audio is generated by an AI tool.
அர்ஜென்ட்டினாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) கின்னஸ் உலகச் சாதனை (Guinness World Records) படைத்திருக்கிறார்.
உலகக் கிண்ணப் போட்டியில் knockout சுற்றில் இன்று எகிப்தை எதிர்த்து விளையாடியது அர்ஜென்ட்டினா.
அந்த ஆட்டத்தின் 79ஆவது நிமிடம் வரை அர்ஜென்ட்டினா அணி ஒரு கோல்கூடப் போடவில்லை. ஆனால் எகிப்து 2 கோல் புகுத்தி முன்னணியில் இருந்தது.
ஆட்டத்தின் 83ஆம் நிமிடத்தில் ஒரு கோல் புகுத்தினார் மெஸ்ஸி. இந்த உலகக் கிண்ணத்தில் அது அவருடைய 8ஆவது கோல்; இதுவரை ஆடிய உலகக் கிண்ணப் போட்டிகளில் அவர் அடித்த 21ஆவது கோலும் அதுதான். அதன்மூலம் உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆக அதிக கோல் புகுத்திய சாதனை புரிந்திருக்கிறார் மெஸ்ஸி.
இவ்வாண்டு உலகக் கிண்ணப் போட்டியில் தொடர்ந்து 9 ஆட்டங்களில் கோல்களைப் புகுத்திய கின்னஸ் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
உலகக் கிண்ணத்தில் ஆக அதிக கோல்களைப் புகுத்தியவருக்கான Golden Boot பட்டம் மெஸ்ஸிக்குக் கிடைக்கலாம்.
பிரான்ஸ் அணியின் கிலியான் எம்பாப்பே (Kylian Mbappe), நார்வே அணியின் எர்லிங் ஹாலாண்ட் (Erling Haaland) ஆகிய இருவரும் 7 கோல்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கின்றனர்.