Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகக் கிண்ணம்: காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும் முதல் நாடு மொரொக்கோ

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணம்: காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும் முதல் நாடு மொரொக்கோ

REUTERS/Hannah Mckay

வெளியீடு : 05 Jul 2026 09:25AM புதுப்பிப்பு : 05 Jul 2026 01:16PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள முதல் நாடு மொரொக்கோ (Morocco).

கனடாவைச் சந்தித்த ஆட்டத்தில், மொரொக்கோ 3-0 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டது.

போட்டிகளை ஏற்றுநடத்தும் மூன்று நாடுகளில் ஒன்று - கனடா.

அந்த மூன்று நாடுகளில், அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்திருக்கும் முதல் நாடு கனடா.

உலகக் கிண்ண வரலாற்றில் காலிறுதிச் சுற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை தகுதிபெற்றிருக்கும் முதல் ஆப்பிரிக்க நாடு மொரொக்கோ.

மொரொக்கோ இதற்கு முன் 2022இல் நடந்த போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இது வெறும் ஆரம்பமே என்று கூறுகிறது மொரொக்கோ.

"நாங்கள் தொடர்ந்து முன்னேற விரும்புகிறோம். நாங்கள் நிறுத்த விரும்பவில்லை," என்றார் பயிற்றுவிப்பாளர் முகமது வஹ்பி (Mohamed Ouahbi).

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்