Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

காற்பந்து வீரரின் கண்ணீரைக் கண்டு தாய்க்கு விசா வழங்கிய அமெரிக்கா

வாசிப்புநேரம் -
காற்பந்து வீரரின் கண்ணீரைக் கண்டு தாய்க்கு விசா வழங்கிய அமெரிக்கா

(படம்: IMAGN IMAGES via Reuters/Brett Davis)

வெளியீடு : 18 Jun 2026 09:30PM புதுப்பிப்பு : 19 Jun 2026 11:19AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காபோ வெர்ட் (Cabo Verde) அணியின் நட்சத்திர கோல் காவலர் வோஸின்யாவின் (Vozinha) தாய்க்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

அந்தச் செய்தியை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கிம் ஜெஃப்ரிஸ் (Hakeem Jeffries) அறிவித்தார்.

தாம் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதைத் தாயால் பார்க்க முடியவில்லை என்று வோஸின்யா கண்ணீர் மல்கச் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

அமெரிக்க அரசாங்கம் வெளிநாட்டவர்களுக்கு எதிராகக் கொள்கைகளைக் கடுமையாக்குகிறது.

குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வோர் 15,000 டாலர் செலுத்தினால்தான் அவர்களுக்கு விசா வழங்கப்படும்.

அந்த நாடுகளில் ஒன்று காபோ வெர்ட்.

கடைசி நேரத்தில்தான் உலகக் கிண்ண நுழைவுச்சீட்டுகளை வாங்கியோருக்கு அந்தக் கட்டுப்பாடு அகற்றப்பட்டது.

வோஸின்யா தமது தாயின் அனுபவத்தைப் பற்றிப் பகிர்ந்த பிறகு வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோவிடம் பேசியதாகத் திரு ஜெஃப்ரிஸ் சொன்னார்.

வோஸின்யாவின் அடுத்த ஆட்டத்தை அவருடைய தாய் காண ஏற்பாடு செய்யவேண்டும் என்று திரு ஜெஃப்ரிஸ் கோரிக்கை விடுத்த பிறகு வெளியுறவு அமைச்சு விசா வழங்கியது.
ஆதாரம் : Others/The Guardian

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்