Skip to main content
அடுத்த உலகக் கிண்ண இறுதியாட்டம் எங்கே? சர்ச்சை தொடங்கிவிட்டது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அடுத்த உலகக் கிண்ண இறுதியாட்டம் எங்கே? சர்ச்சை தொடங்கிவிட்டது

வாசிப்புநேரம் -
அடுத்த உலகக் கிண்ண இறுதியாட்டம் எங்கே? சர்ச்சை தொடங்கிவிட்டது

படம்: REUTERS/Kacper Pempel

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நியூயார்க் நகரம் நாளை நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த உலகக் கிண்ண இறுதியாட்டம் எங்கே நடக்கும் என்ற சர்ச்சை தொடங்கிவிட்டது.

மொரோக்கோ, ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய மூன்று நாடுகள் 2030 உலகக் கிண்ணப் போட்டியை நடத்தவிருக்கின்றன.

இறுதியாட்டம் எங்கே என்பதுதான் சர்ச்சை.

ஸ்பெயின் மொரோக்கோ இரண்டு நாடுகளுமே அதற்குப் போட்டியிடுகின்றன.

மொரோக்கோ 12 பில்லியன் டாலர் (15 பில்லியன் வெள்ளி) செலவில் புதிய அரங்கைக் கட்டுகிறது.

அதில் 115,000 பேர் அமரலாம்.

மொரோக்கோ காஸாபிளாங்காவில் (Casablanca) இறுதிப் போட்டியை உறுதிசெய்ய பெரும்புள்ளிகளை வைத்துக் காய் நகர்த்துவதாகச் சொல்லப்படுகிறது.

ஸ்பெயினும் தன்னிடம் பல அரங்குகளும் போட்டிகளை ஏற்பாடு செய்த அனுபவமும் இருப்பதாகச் சொல்கிறது.

1982ஆம் ஆண்டு ஸ்பெயின் உலகக் கிண்ணத்தை ஏற்று நடத்தியது. அப்போது அங்குள்ள சாண்டியாகோ பெர்னபே (Santiago Bernabeu) அரங்கத்தில் இறுதிப் போட்டி நடந்தது.

அதில் 83,000 பேர் அமர்ந்து ஆட்டத்தைக் காணலாம்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்