Skip to main content
'படகோட்டி' விடைபெற்ற நார்வே
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

'படகோட்டி' விடைபெற்ற நார்வே

வாசிப்புநேரம் -
'படகோட்டி' விடைபெற்ற நார்வே

REUTERS/Leonhard Foeger

வெளியீடு : 12 Jul 2026 10:33AM புதுப்பிப்பு : 12 Jul 2026 01:55PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியிலிருந்து வெளியேறினாலும் நார்வே அணிக்குக் கொண்டாட்டமே.

காலிறுதிச் சுற்று வரை முதல் முறையாகத் தகுதிபெற்றதை அணியும் ரசிகர்களும் கொண்டாடினர்.

சிவப்பு, வெள்ளை, நீல நிறங்களில் சட்டை அணிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள்  ஒஸ்லோவில் (Oslo) உள்ள அரண்மனை வரை மகிழ்ச்சிப் பேரணி நடத்தினர்.

வானத்தை மிளிரவைத்த வாணவேடிக்கையுடன் அவர்கள் கடைசியாக 'viking row'இலும் ஈடுபட்டனர்.

"ரோ! ரோ!" என்ற முழக்கதுடன் அனைவரும் படகோட்டுவது போல் பாவனை செய்வது 'viking row.'

நார்வே ஆட்டங்களில் ரசிகர்கள் செய்த அந்தப் பாவனை உலகக் கிண்ணப் போட்டியில் நார்வே அணிக்குத் தனி முத்திரையாக விளங்கியது.

வெளிநாட்டைச் சேர்ந்த ரசிகர்களும் viking rowஐச் செய்யத் தொடங்கினர்.

'உலகம் முழுதும் எங்கள் viking row பரவியது. அது போதும்,' என்கின்றனர் ரசிகர்கள்.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்