பெருவில் பிறந்த 500 குழந்தைகளுக்கு "எர்லிங் ஹாலண்ட்" பெயர்
IMAGN IMAGES via Reuters/Sam Navarro
This audio is generated by an AI tool.
தென்னமெரிக்க நாடான பெருவில் பிறந்த கிட்டத்தட்ட 500 குழந்தைகளுக்கு நார்வே வீரர் எர்லிங் ஹாலண்ட்டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நார்வே வீரர் ஹாலண்ட் காற்பந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
இந்த உலகக் கிண்ணத்தில் அவர் இதுவரை நான்கு போட்டிகளில் ஏழு கோல்கள் அடித்துள்ளார்.
ஹாலண்டின் பல முக்கிய கோல்கள் மூலம் நார்வே முதல் முறையாக காலிறுதிச் சுற்று வரை முன்னேறியுள்ளது.
இந்நிலையில் பெருவில் 468 குழந்தைகளுக்கு ஹாலண்ட் என்ற பெயரும், 91 குழந்தைகளுக்கு எர்லிங் ஹாலண்ட் என்ற முழுப் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரு ரசிகர்கள் முன்னணி ஆட்டக்காரர்களின் பெயர்களைப் பிள்ளைகளுக்கு வைப்பது புதிதல்ல.
அங்கு கிட்டத்தட்ட 3, 500 மெஸ்ஸிக்கள், 1,200 ரொனால்டோக்கள் இருக்கின்றனர்.
பிரேசிலின் நெய்மார் (Neymar) பெயரில் கிட்டத்தட்ட 34,000 பேர் பெருவில் உள்ளனர்.