உலகக் கிண்ணம்: தொடர் தோல்வியிலிருந்து மீண்டிருக்கும் கத்தார்
REUTERS/Luisa Gonzalez
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இன்று (14 ஜூன்) அதிகாலை மூன்று மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் கத்தார் ஆட்டத்தைச் சமப்படுத்தி சுவிட்ஸர்லந்துக்கு அதிர்ச்சியைத் தந்தது.
கத்தாரின் கடைசி நேர கோல் மூலம் ஆட்டம் ஒன்றுக்கு ஒன்று என்று சமநிலையில் முடிந்தது.
கத்தார் இதற்கு முன்னர் 2022இல் நடந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி கண்டது.
அதிலிருந்து மீண்டு வந்துள்ள கத்தாருக்குப் புதிய நம்பிக்கை கிடைத்திருக்கிறது.
மற்றோர் ஆட்டத்தில் பிரேசிலும் மொரோக்கோவும் ஒன்றுக்கு ஒன்று என்று சமநிலை கண்டன.
காலை 9 மணிக்கு ஹெய்ட்டிக்கும் ஸ்காட்லந்துக்கும் இடையிலான ஆட்டம் தொடங்கியது.
நண்பகல் 12 மணிக்கு ஆஸ்திரேலியா, துருக்கியே மற்றொரு ஆட்டத்தில் சந்திக்கின்றன.