உலகக் கிண்ண வீரர் 25 வயதில் மரணம்
REUTERS/Dylan Martinez
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் விளையாடிய தென்னாப்பிரிக்காவின் ஜேய்டன் ஏடம்ஸ் (Jayden Adams) காலமானார்.
அவருக்கு வயது 25.
அவர் எப்படி மாண்டார் என்பது தெரிவிக்கப்படவில்லை.
ஏடம்ஸ், கேப் டவனில் (Cape Town) உள்ள அவரின் வீட்டில் மாண்டுகிடக்கக் காணப்பட்டதாகத் தெரிகிறது.
அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.
தென்னாப்பிரிக்கா அதன் இளம் திறனாளர்களில் ஒருவரை இழந்துவிட்டதாக அந்நாட்டு விளையாட்டு, கலை, கலாசாரத் துறைக்கான அமைச்சர் கூறினார்.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் தென்னாப்பிரிக்கா 'Knockout' சுற்று வரை முன்னேற உதவியவர் ஏடம்ஸ்.
அவர் விளையாடி, சில வாரங்களில் மரணமடைந்திருப்பது வருத்தமாக இருப்பதாக FIFA அமைப்பு கூறியது.
தென்னாப்பிரிக்கா A பிரிவில் செக்கியாவுடன் (Czechia) மோதியபோது ஏடம்ஸ் தமது பாட்டி மாண்ட துக்கத்தில் இருந்தார்.
ஆட்டம் தொடங்குவதற்குச் சில மணி நேரம் முன்னர்தான் அவருக்குப் பாட்டி மாண்டது தெரியவந்தது.
அந்த நிலையிலும் ஏடம்ஸ் மனம் தளராமல் விளையாடியதாகத் தென்னாப்பிரிக்காவின் காற்பந்துச் சங்கம் கூறியது.