கிண்ணம், பதக்கம்...இப்போது மோதிரம்- FIFAஇன் புதிய பரிசு
படம்: Reuters/Dylan Martinez
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றிபெறும் அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் மோதிரம் பரிசாக வழங்கப்படும்.
வெற்றிக் கிண்ணம், தங்கப் பதக்கங்களுடன் சேர்த்து இம்முறை மோதிரமும் வழங்கப்படுவதாக FIFA சொன்னது.
அதற்காக 30 சிறப்பு மோதிரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
வெற்றிபெற்ற அணியின் அடையாளத்துக்கு ஏற்ப அவை பிறகு மாற்றியமைக்கப்படும்; பின்னர் ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனியாக அளவெடுத்து மோதிரம் வழங்கப்படும் என்றது FIFA.
மோதிரத்தின் ஒரு பக்கத்தில் உலகக் கிண்ணச் சின்னமும், மறுபக்கத்தில் வெற்றிபெற்ற அணியின் விவரங்களும் இருக்கும்.
மொத்தம் 2,026 மோதிரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
அவை ஒவ்வொன்றுக்கும் பிரத்தியேக எண்கள் இருக்கும்.
வீரர்களுக்கு வழங்கப்படும் 30 மோதிரங்களைத் தவிர மீதமுள்ள 1,996 மோதிரங்கள் அதிகாரபூர்வ நினைவுப் பொருளாக உலகம் முழுதும் உள்ள ரசிகர்களுக்கு விற்கப்படும்.
வட அமெரிக்காவின் முக்கிய விளையாட்டுப் போட்டிகளில் மோதிரங்கள் பரிசாக வழங்கப்படும் கலாசாரம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
ஆனால் FIFA போட்டிகளில் மோதிரம் வழங்கப்படுவது இதுவே முதல்முறை.