Skip to main content
உலகக் கிண்ணத்தின் 'நான்கு கால்' பாதுகாவலர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகக் கிண்ணத்தின் 'நான்கு கால்' பாதுகாவலர்கள்

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணத்தின் 'நான்கு கால்' பாதுகாவலர்கள்

படம்:REUTERS/Ed White

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காளி (Kali) என்ற ஐந்து வயது லாப்ரடார் (Labrador) நாய், உலகக் கிண்ணக் காற்பந்து தொடரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

மிகவும் அமைதியான குணம் கொண்ட காளியின் பணி, வெடிபொருட்கள், துப்பாக்கிகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்ட ஆபத்தான பொருள்களைக் கண்டறிவதாகும்.

காளியைப் போல் நூற்றுக்கணக்கான காவல்துறை, பாதுகாப்பு மோப்ப நாய்கள், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பணியாற்றி வருகின்றன.

போட்டி அரங்குகள் மட்டுமின்றி, பயிற்சித் திடல்கள், அணிகள் தங்கும் விடுதிகள், போக்குவரத்து வழித்தடங்கள் ஆகியவற்றிலும் அவை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்காவில் நடைபெற்ற ஆட்டங்களின்போது ஈரானின் அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதால் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.

பயங்கரவாத அச்சுறுத்தலைத் தடுப்பதுடன், ரசிகர்கள் வாணவேடிக்கைகள் போன்ற பொருள்களை அரங்குக்குள் கொண்டு வருவதையும் மோப்ப நாய்கள் தடுக்கின்றன.

பொதுமக்கள் அச்சப்படாமல் இருக்க பெரும்பாலும் நட்புணர்வுமிக்க லாப்ரடார் போன்ற நாய்களே பாதுகாப்புப் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்