Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம் செய்தியில் மட்டும்

'அணியின் சட்டையை அணிந்து ஆட்டத்தைப் பார்க்கும்போது விவரிக்க முடியாத பரவசம்'- பல்வேறு வழிகளில் தங்கள் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்கள்

வாசிப்புநேரம் -
விறுவிறுப்பாக நடைபெறும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது.

ரசிகர்கள் படபடப்பான, பரபரப்பான மனநிலையில் உள்ளனர்.

காற்பந்து ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான அணிக்கு பல்வேறு வழிகளில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அவர்களில் சிலரைச் சந்தித்தது 'செய்தி'.
 
(படம்: Luis ROBAYO / AFP)

லயனல் மெஸ்ஸிக்காகவே அனைத்து அர்ஜென்ட்டினா ஆட்டங்களையும் பார்ப்பதாகச் சொன்னார் திரு. நைஜல்.


"ஆட்டங்களைப் பார்க்கும்போது, அர்ஜென்ட்டினா அணியின் சட்டையை அணிந்துகொள்வேன். அதை அணியும்போது, விவரிக்க முடியாத ஒரு பரவசம் ஏற்படுகிறது."


அதோடு அர்ஜென்ட்டினாவுக்கு ஆதரவு அளிக்கும் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டங்களைப் பார்க்கும்போது, அந்த அனுபவம் இன்னும் சுவாரஸ்யமாக இருப்பதாக உற்சாகம் பொங்கத் தெரிவித்தார் திரு. நைஜல்.

(படம்: ஜனார்தன்)

சிறு வயதிலிருந்தே காற்பந்து மீது மோகம் கொண்ட திரு. ஜனார்தன் Instagram பக்கத்தில் அணி விளையாடும் ஆட்டங்களின் கோல் எண்ணிக்கையை அடிக்கடி பகிர்ந்து கொள்வதாகச் சொன்னார்.

அதைப் பார்த்து தம்மைப் பின்தொடரும் பலர் விருப்பக் குறியிடும் போது, அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுவதாகக் குறிப்பிட்டார் அவர்.

மொரோக்கோ அணி மீது இம்முறை ஒரு தனிப் பற்று ஏற்பட்டதாகவும் அவர் சொன்னார்.

அனைத்துச் சவால்களையும் கடந்து காற்பந்து உலகில் முத்திரை பதித்த மொரோக்கோவின் ஆட்டங்களை உற்சாகத்துடன் பார்த்து, சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்ந்ததாகச் சொன்னார் அவர்.

அனைத்துச் சவால்களையும் கடந்து காற்பந்து உலகில் முத்திரை பதித்த மொரோக்கோவின் ஆட்டங்களை உற்சாகத்துடன் பார்த்து, சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்ந்ததாகச் சொன்னார் அவர்.

(படம்: முகமது)
போர்ச்சுகல் ஆதரவளரான திரு. முகமது அணியின் பெயர் பதித்த சால்வையைத் தொலைக்காட்சி முன் வைத்திருக்கிறார்.

"ஆட்டத்தைப் பார்க்கும்போது சால்வை தொலைக்காட்சி முன் இருப்பது ஒருவித மகிழ்ச்சி அளிக்கும்." என்றார் அவர்.
(படம்: அருள் ஒஸ்வின்)

இந்த முறை சமூக ஊடகங்களில் ஆதரவு காட்ட முடிவதைச் சுட்டினார் காற்பந்து ஆர்வலர் திரு. அருள் ஒஸ்வின்.



"உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி சார்ந்த சமூகத் தளங்களைப் பின்தொடர்ந்து வருகிறேன். இந்த முறை காற்பந்து உலகில் ஜாம்பவானாகக் கருதப்படும் லயனல் மெஸ்ஸிக்காகவே அர்ஜென்ட்டினா அணிக்கு ஆதரவு அளிக்கிறேன்."


என்று உற்சாகம் பொங்கச் சொன்னார்.

(படம்: காணொளி/ A. அருண்மோகன்)
ஆட்டங்களைப் பார்க்க விளையாட்டு நடுவத்துக்குச் செல்லும் திரு A. அருண்மோகன் உற்சாகமூட்டும் ஒலிக்கருவிகளைத் தட்டி தமது ஆதரவை வெளிப்படுத்துகிறார்.

பொருள்கள், சட்டைகள், சமூக ஊடகங்கள் வழி ஆர்வத்தை வெளிப்படுத்துவோர் உண்டு. ஆனால் பல ரசிகர்கள் தங்களை அறியாமல் வெளிப்படுத்தும் ஆதரவு.....

"விளையாட்டாளர்கள் கோல் அடிக்கும்போது, இயல்பாகவே நான் உரத்த குரலில் “கோல்!” என்று கத்தி விடுவேன். நண்பர்களுடன் பார்க்கும்போது, இடம் பொருள் ஏவல் தெரிவதில்லை. "

என்று உற்சாகமாகத் தெரிவித்தார் திரு. ராமராஜ்.

இன்னும் இறுதிச் சுற்றில் பல வழிகளில் ஆதரவு தெரிவிக்க ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அவற்றை நேரடியாக உங்களுக்குக் கொண்டுவர 'செய்தி' குழு காத்திருக்கிறது.

தொடர்ந்து இணைந்திருங்கள்!

'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம். 

சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்