Skip to main content
காற்பந்தில் சொக்கிவிட்டது அமெரிக்கா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

காற்பந்தில் சொக்கிவிட்டது அமெரிக்கா - 63 மில்லியன் பேர் இறுதியாட்டத்தைப் பார்த்தனர்

வாசிப்புநேரம் -
காற்பந்தில் சொக்கிவிட்டது அமெரிக்கா - 63 மில்லியன் பேர்  இறுதியாட்டத்தைப் பார்த்தனர்

படம்: Reuters/Caean Couto

வெளியீடு : 22 Jul 2026 03:25PM புதுப்பிப்பு : 22 Jul 2026 06:08PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கிண்ண இறுதியாட்டத்தைக் கிட்டத்தட்ட 63 மில்லியன் அமெரிக்கர்கள் பார்த்துள்ளனர்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அதுவே ஆகப்பெரிய எண்ணிக்கை.

காற்பந்து அமெரிக்காவில் பிரபலமடைந்துவருவதை அது காட்டுகிறது.

Fox தொலைக்காட்சி ஆங்கில ஒளிபரப்பை 38.9 மில்லியன் பேர் பார்த்தனர்.

Comcast நிறுவனத்தின் Telemundo ஒளிவழியின் ஸ்பானிய ஒளிபரப்பை 23.9 மில்லியன் பேர் கண்டுகளித்தனர்.

2022 கத்தாரில் நடந்த உலகக் கிண்ண இறுதியாட்டத்தை 22.3 மில்லியன் அமெரிக்கர்கள் பார்த்தனர். அதனுடன் ஒப்பிடும்போது இவ்வாண்டின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மடங்கு.

இறுதியாட்டம் மட்டுமல்லாமல் Knockout சுற்று ஆட்டங்களையும் பெரிய அளவில் அமெரிக்கர்கள் பார்த்தனர்.

இங்கிலாந்து-மெக்சிகோ ஆட்டத்தைக் கிட்டத்தட்ட 45 மில்லியன் அமெரிக்கர்கள் கண்டனர்.

அதனுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு நடந்த NBA கூடைப்பந்து இறுதிச்சுற்றைத் தொலைகாட்சியில் கண்டவர்களின் எண்ணிக்கை 25 மில்லியன் மட்டுமே.

உலகக் கிண்ண ஆட்டங்கள் அமெரிக்காவில் முக்கிய ஒளிபரப்பு நேரங்களில் ஒளிபரப்பானதால் பலரால் நேரடியாகப் பார்க்கமுடிந்ததாகக் கூறப்படுகிறது.

தென் அமெரிக்க நாடுகளிலிருந்து வந்த குடியேறிகள் பலரிடையே காற்பந்து பிரபலமாக இருப்பதால் அவர்கள் திரள் திரளாக ஸ்பானிய ஒளிபரப்பைக் கண்டனர்.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்