Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் போதைப்பொருள் கடத்த முயற்சி

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் போதைப்பொருள் கடத்த முயற்சி

Pablo PORCIUNCULA / AFP

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில்
போதைப்பொருள் கடத்துவதற்கான முயற்சியைக் கத்தார் முறியடித்துள்ளது.

காற்பந்து விளையாட்டாளர்களால் பயன்படுத்தப்படும் tramadol மாத்திரைகள், கஞ்சாவிலிருந்து செய்யப்படும் hashish போதைப்பொருள் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஹமாட் அனைத்துலக விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பயணி ஒருவரின் உடைமைகளில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஏறக்குறைய 2,000 tramadol மாத்திரைகளும் சுமார் 460 கிராம் hashish பொதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கத்தாரில் பொதைப்பொருள் வைத்திருப்பதற்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் உள்ளன. அதிகக் காலச் சிறைத்தண்டனை, கூடுதல் அபராதம் இவற்றோடு பொதைப்பொருள் வைத்திருப்போர் நாடு கடத்தப்படுவதற்கும் சட்டத்தில் இடமுண்டு.

- AFP

'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம். 

சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்